தாஜ்மகால் இந்தியா என்ற மகத்தான நாட்டிற்கான மரியாதை ... அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் புகழாரம்!
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர் நேற்று தனது 3 குழந்தைகளுடன் தாஜ்மஹாலை சுற்றி பார்த்தார். இதனையடுத்து வான்ஸ் தாஜ்மகால் உண்மையான அன்புக்கான சான்று என புகழாரம் சூட்டியுள்ளார்.
இதற்காக நேற்று ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ரா விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். அங்கு அவரை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் துணை அதிபர் வான்ஸ் குடும்பத்தினர் தாஜ்மகால் வரை காரில் பயணம் செய்தனர். தாஜ்மகாலை குடும்பத்துடன் வான்ஸ் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அவர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில், தாஜ்மகால் அற்புதமானது. உண்மையான அன்புக்கான சான்று, மனித புத்திகூர்மை மற்றும் இந்தியா என்ற மகத்தான நாட்டிற்கான மரியாதை என எழுதினார். துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் உள்ள சிட்டி பேலஸ் செல்வதற்கு திட்டமிட்ட நிலையில் அதனை ரத்து செய்து விட்டனர். இன்று அவர்கள் அமெரிக்கா திரும்பி செல்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!