வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க... இன்று "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்- முழு விபரங்கள் இதோ!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் 14-வது கட்ட முகாம், வட சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் இன்று சி.எஸ்.ஐ. பிஷப் கோரி மேல்நிலைப்பள்ளி வளாகம், பிராட்வே, ராயபுரம் மண்டலத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் மொத்தம் 17 துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க உள்ளனர். பொது மருத்துவம், எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், இதயம், நரம்பியல், தோல் மற்றும் பல் மருத்துவம். கண் சிகிச்சை, காது மூக்கு தொண்டை, மனநலம், நுரையீரல் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனைகள்.
ஸ்கேன் பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல். ஆரம்பக்கால புற்றுநோயைக் கண்டறியும் பிரத்யேகப் பரிசோதனைகள்.
மருத்துவப் பரிசோதனைகள் மட்டுமின்றி, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான பதிவுகளும் இங்கு நடைபெறுகின்றன: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல். அவர்களுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்குதல். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்குதல். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆலோசனை வழங்கல் ஆகிய பணிகள் நடைபெறும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!