undefined

24 மணி நேரத்தில் 52 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை... பாகிஸ்தானில் அதிரடி! 

 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மாகாணங்களில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் ராணுவம் இணைந்து இந்த வேட்டையை நடத்தியது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற நடவடிக்கையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்கள் தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு தளபதி உட்பட டிடிபி அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாத செயல்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!