undefined

2 வருட லிவிங் டு கெதருக்கு பிறகு தமன்னா விஜய் வர்மா காதல் முறிவு?!

 

காதலில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக  விஜய் வர்மாவை தமன்னா பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2023ல்  வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரின் மூலம் விஜய் வர்மா – தமன்னா இருவரும் காதலிக்க தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.  இதனை இருவரும் பல பேட்டிகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தனர்.  மேலும், மும்பையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒன்றாக எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வந்தனர்.

 கடந்த சில நாட்களுக்கு முன்  தமன்னா விரைவில் விஜய் வர்மாவை திருமணம் செய்ய உள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டார்கள். தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனை உறுதி செய்யும் வகையில்  விஜய் வர்மாவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார் தமன்னா.

இனி இருவரும் நண்பர்களாக தொடர முடிவு செய்திருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமன்னா தற்போது தெலுங்கில் ‘ஓடிலா 2’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்  இதன் டீசர் கும்பமேளாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. காதல் முறிவு ஏற்பட்டு இருப்பதால் விரைவில் புதிய படங்களில் தமன்னா ஒப்பந்தமாகலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?