மைசூர் சாண்டல் சோப்புக்கு விளம்பரத் தூதராக தமன்னா … கன்னட அமைப்புகள் எதிர்ப்பு!
கர்நாடகாவின் பாரம்பரியமான மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தனது விற்பனையை வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.5,000 கோடி வருவாய் ஈட்டும் இலக்கையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
இந்த நிலையில் உள்ளூர் நடிகர்களை தேர்வு செய்யாமல் தமன்னாவை தேர்வு செய்தது ஏன் என கன்னட அமைப்புகள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். கர்நாடக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நிறுவனத்திற்கு ரஷ்மிகா மந்தனா அல்லது நடிகர் ரிஷப் ஷெட்டியை தேர்வு செய்யலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரூ.6.2 கோடி ஒப்பந்தத்தில் 2 ஆண்டுகளுக்கு தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் 57 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தார். சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் இருப்பதால் வணிக ரீதியாகவே தமன்னா தேர்வு செய்யப்பட்டதாக அமைச்சர் எம்.பி.பாட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!