undefined

தமிழ் அடையாளம்,   ஆங்கிலம் வாய்ப்பு... அன்பில் மகேஷ் அமித்ஷாவுக்கு கடும் கண்டனம்!  

 


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலம் பேசுபவர் விரைவில் வெட்கபட வேண்டிய காலம் வரும் என பேசியிருந்தார். இவரது கருத்துக்கு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூன் 19ம் தேதி   புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” எனக் கூறியிருந்தார்.

ஆனால் இந்தியாவில், அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை உயர்குடியினராக சித்தரிக்க விரும்புகின்றனர்.  அடையாளத்துக்கு தமிழ், வாய்ப்புக்கு ஆங்கிலம் என்ற கொள்கையையே தமிழ்நாடு பின்பற்றுகிறது. மொழி என்பது வளர்ச்சிக்கான ஏணியாக இருக்க வேண்டுமே அன்றி, தடைக் கல்லாக இருக்கக் கூடாது. பல நாடுகளும் ஆங்கிலத்தை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கக் கற்பிக்கின்றன.

திமுகவில், அனைவருக்கும் அணுகல் – தமிழ் அடையாளத்திற்காகவும், ஆங்கிலம் வாய்ப்பிற்காகவும் நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டும் கிடைக்கின்றன. ஏனென்றால் மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது, ஒரு ஏணியாக இருக்க வேண்டும்” என  சாடியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது