இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடக்கம்!
சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் இன்று காலை 9.10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தருகிறார். அவருக்குப் போலீஸ் அணிவகுப்புடன் கூடிய சிவப்பு கார்பெட் வரவேற்பு அளிக்கப்பட்டதும், சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் ஆளுநரை அவைக்குள் அழைத்துச் செல்கின்றனர். கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது.
கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில், தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தால் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்திருந்தார். இந்த முறையும் அதே மரபு பின்பற்றப்படும் எனச் சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் தனது உரையை எவ்வாறு நிகழ்த்துவார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்த பிறகு, அதன் தமிழாக்கத்தைச் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இந்த உரையில் தமிழக அரசின் கடந்த கால சாதனைகள் மற்றும் 2026 தேர்தலைக் கருத்தில் கொண்ட முக்கியக் கொள்கை அறிவிப்புகள் இடம் பெறும் எனத் தெரிகிறது.
இன்று ஆளுநர் உரை முடிந்ததும், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். அதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!