undefined

ஜனவரி 24ம் தேதி   வரை தமிழக சட்டசபை கூட்டம்! 

 

தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் பல்வேறு துறைகள் தொடர்பான கருத்துகள் முன்வைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதால், சட்டசபையில் கடும் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!