undefined

தமிழிசை தலைமையில் தமிழக பாஜக 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு!

 

அதிமுக கூட்டணியில் நீடிக்கும் பாஜக, தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தலின் மிக முக்கிய ஆவணமான தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான குழு விபரங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் தலைமையிலான இந்தக் குழுவில் அரசியல் அனுபவம் மற்றும் துறைசார் அறிவு மிக்க 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

வி.பி. துரைசாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), டாக்டர் கே.பி. இராமலிங்கம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), டாக்டர் பி. கனகசபாபதி (மாநில துணைத் தலைவர்), பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் (மாநிலப் பொதுச் செயலாளர்), கார்த்தியாயினி (வேலூர் முன்னாள் மேயர்), சி. நரசிம்மன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), கே.எஸ். இராதாகிருஷ்ணன், ஏ.என்.எஸ். பிரசாத், ஆர். அர்ஜுனமூர்த்தி, ராஜலட்சுமி, ஆர். ரவிச்சந்திரன், ஆர். ஆதித்யா சேதுபதி

இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்து அறிக்கையைத் தயாரிக்க உள்ளனர்.

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைத் தமிழகச் சூழலுக்கு ஏற்ப மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வாக்குறுதிகள் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் இலவசத் திட்டங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டங்கள் குறித்த கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!