காரில் கள்ளக்குறிச்சி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்... ₹1,045 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்!
"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 26) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து காரில் கள்ளக்குறிச்சிக்குப் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.
காலை 11 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் ₹2,302 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட காலணி உற்பத்தி ஆலை (Footwear Park) பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதன் மூலம் சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 11:15 மணி: தியாகதுருகம் அடுத்த திம்மலையில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. நண்பகல் 12 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அடையாளமாக ₹139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் மேற்கொள்ள உள்ள பணிகள்: ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ₹100.80 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 2,525 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கிறார். ₹386.48 கோடி மதிப்பிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ₹1,045.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,16,056 பயனாளிகளுக்கு நேரடியாக வழங்குகிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக நிர்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!