பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி இன்று காலை அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
'இந்தித் திணிப்பை எதிர்ப்போம், அண்ணா வழியில் பயணிப்போம்' என்று அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்ற முதல்வர், பெரியாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார். திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் உடனிருந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!