undefined

 தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிப்பு… பா.ரஞ்சித்தின் கேள்வி பரபரப்பு!

 
 

தமிழக அரசு 2016 முதல் 2022 வரை திரைப்பட விருதுகளையும், 2014 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகளையும் அறிவித்துள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் விழா நடைபெறுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்க உள்ளார். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டதால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு சிறந்த நடிகராக விஜய்சேதுபதி, சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ், சிறந்த படமாக மாநகரம் தேர்வானது. 2017ஆம் ஆண்டில் கார்த்தி, நயன்தாரா, அறம் படம் விருது பெற்றது. தொடர்ந்து வடசென்னை, பரியேறும் பெருமாள், அசுரன், சூரரைப் போற்று, கூழாங்கல் உள்ளிட்ட படங்களும், தனுஷ், ஜோதிகா, சூர்யா, பார்த்திபன், மஞ்சு வாரியர் போன்ற நடிகர் நடிகைகளும் விருதுகளை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் அரசு விருதுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். “விருது அமைப்புகள் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுகிறதா?” என அவர் கேட்டுள்ளார். அவரது கருத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருது விழா நெருங்கி வரும் நிலையில், தமிழ் சினிமா உலகமே இதனை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!