2026 குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி!
டெல்லியில் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின விழா எப்போதும் கோலாகலமாக நடைபெறும். முப்படைகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் விழாவுக்கு தனிச்சிறப்பு தரும். அந்த வகையில், 2026 குடியரசு தின விழாவும் டெல்லி கடமை பாதையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன. இதில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘பசுமை மின் சக்தி’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அம்சங்களை இந்த அலங்கார ஊர்தி வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 2026-ல் கிடைத்த ஒப்புதல் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு மீண்டும் தேசிய மேடையில் முக்கியத்துவம் கிடைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!