undefined

தமிழக அரசின் 'தமிழ் விருதுகள்' அறிவிப்பு: அமைச்சர் துரைமுருகன், வெ.இறையன்பு, யுகபாரதி ஆகியோருக்கு உயரிய அங்கீகாரம்!

 

தமிழர் திருநாளாம் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட சான்றோர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளைப் பெற்றவர்கள் குறித்து வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் மிக உயரிய விருதான திருவள்ளுவர் விருது, முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசியல் மற்றும் சமூகப் பணிகளுக்காக வழங்கப்படும் விருதுகளில், பேரறிஞர் அண்ணா விருது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது திராவிட இயக்கப் பேச்சாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கர் விருது, விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

எழுத்து மற்றும் கவிதை துறையில் முத்திரை பதித்தவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன: மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது: முன்னாள் தலைமைச் செயலாளரும் சிறந்த எழுத்தாளருமான வெ.இறையன்புவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராசர் விருது: எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: முனைவர் செல்லப்பாவுக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தலா ₹5 லட்சம் ரொக்கப்பரிசு, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை வழங்கப்பட உள்ளன. 1986ம் ஆண்டு முதல் தமிழ்ப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!