தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி சேர கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் கட்டணம் இல்லாமல் உறுப்பினராகச் சேர்வதற்கான கால அவகாசத்தை, 2026 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்துத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது வணிகர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.
வாரியத்தின் நோக்கம்: இந்தியாவிலேயே முதன்முதலாக 1989-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம், சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செயல்படுத்தி வருகிறது.
இதுவரை, தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம், மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் (GST) சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற / பதிவு பெறாத 1,13,118 வணிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினராவதற்கான வாரியத்தின் கட்டணத் தொகையான ரூ.5,500/-ஐச் செலுத்துவதிலிருந்து, டிசம்பர் 1, 2025 முதல் மார்ச் 31, 2026 வரையிலான நான்கு மாதங்களுக்கு விலக்கு அளித்து, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
யார் சேரலாம்?
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் (GST) சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்கள். வருடத்திற்கு ரூ.40 இலட்சம் வரை விற்றுமுதல் (Turn Over) அளவு வியாபாரம் செய்யும் வணிகர்கள். இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, தகுதியுள்ள வணிகர்கள் அனைவரும் கட்டணமின்றி வாரியத்தில் இணைந்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!