தமிழகத்தில் இருந்து சென்ற லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் பலி; 5 பேர் படுகாயம்!
கேரளாவின் மலைப்பாதைகளில் நிலவும் அபாயகரமான வளைவுகள் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக மற்றொரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
தமிழகத்திலிருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி, இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே வந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
மலைப்பாதையின் குறுகிய வளைவில் திரும்ப முயன்றபோது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த 100 அடி ஆழமான பள்ளத்தில் ஜே.சி.பி வாகனத்துடன் தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் லாரி முற்றிலும் நொறுங்கியது. லாரியின் ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும் போலீசாரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். லாரியில் பயணித்த மேலும் 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காகத் தமிழக எல்லையோரமான தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!