ஈழ உறவுகளுக்குக் கைகொடுத்த தமிழகம்... இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் மு.க.ஸ்டாலின்!
வங்கக் கடலில் உருவான 'டித்வா' புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள இலங்கை மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் இன்று (சனிக்கிழமை) மொத்தம் 950 டன் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னைத் துறைமுகத்தில் இருந்து இந்தப் பொருட்களைச் சுமந்து செல்லும் கப்பலைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
வரலாறு காணாத பெருமழையால் இலங்கையில் உள்ள பதுளை கண்டு, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்தப் புயலின் கோரத்தாண்டவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; மேலும் 700-க்கும் அதிகமானோர் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமாகி உள்ளனர். புயலால் ஒட்டுமொத்தமாக 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நம் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துயருறும் இலங்கை மக்களுக்குத் தமிழக அரசு துணை நிற்கும் என்றும், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கிட அதிகாரிகள் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, இன்று தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 ஆயிரம் வேஷ்டி, 5 ஆயிரம் சேலை, 1,000 தார்பாலின் ஆகியவற்றுடன், 650 டன் பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும், தூத்துக்குடியில் இருந்து 300 டன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பப்படுகின்றன. தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 டன் நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, இது இலங்கை மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.செங்கோட்டையனின் ஆசீர்வாதமும் விஜய் சாரின் நட்பும் எப்போதும் தொடரும் என்றும் ஜீவா ரவி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!