undefined

தமிழருவி மணியன் மனைவி காலமானார்.. அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

 

எழுத்தாளர், பேச்சாளர், மூத்த அரசியல் தலைவர் தமிழருவி மணியனின் மனைவி பிரேமகுமாரி (71), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவு செய்தி அரசியல் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை அறிந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் சிவக்குமார், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நெற்குன்றத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பிரேமகுமாரியின் மறைவுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!