"விஜய் ஒரு ஜீரோ.. தனியா வந்தா மதிப்பில்ல!" - தமிழிசை விமர்சனம்!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுகள் விவாதமாகி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், விஜய்யை ஒரு 'சின்ன தம்பி'யாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். "திரைத்துறையில் இருந்து வந்த உடனே முதலமைச்சர் ஆகிவிடுவது அவ்வளவு எளிதல்ல. அரசியலில் தம்பி விஜய்க்கு இன்னும் அனுபவம் போதாது. அவர் தனித்து விடப்பட்டதால், அதிமுகவிடம் சரணடையும் நோக்கில் பேசுகிறாரா என்று தெரியவில்லை" எனத் தனது பாணியில் குத்திக் காட்டினார்.
கணிதத்தின் அடிப்படை சூத்திரத்தை அரசியலுக்குப் பொருத்திப் பேசிய தமிழிசை, "விஜய் ஒரு ஜீரோ மாதிரி. பூஜ்ஜியம் தனியாக இருந்தால் அதற்கு எந்த மதிப்பும் இல்லை; அது ஏதேனும் ஒரு எண்ணுடன் சேர்ந்தால்தான் அதற்கு வலிமை கிடைக்கும். அதைப் போலத்தான் விஜய்யின் அரசியலும். அவர் கூட்டணி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.மேலும் அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லாத காரணத்தினால்தான் மற்ற கட்சிகள் அவருடன் கூட்டணி வைக்கத் தயங்குவதாகவும், அதனை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
"தமிழகத்தில் போட்டி என்னவோ திமுகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) இடையேதான். விஜய் பேசுவதால் எங்களுடைய பலம் குறைந்துவிடாது. 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விஜய் நிம்மதியாக அரசியல் செய்யலாம். ஒருவேளை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், கரூரில் நடந்த சம்பவங்களை (அரசியல் அடக்குமுறை) அவர் நினைவில் கொள்ள வேண்டும்" என எச்சரிக்கை கலந்த அட்வைஸையும் வழங்கினார்.
எந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுகிறதோ, அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நிலைக்குத்தான் விஜய் தள்ளப்படுவார் என்றும், திரைத்துறையில் இருந்து வந்த வேகத்திலேயே ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது என்பதையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்தார். தமிழிசையின் இந்த 'ஜீரோ' கமெண்ட் சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!