undefined

ஆண்டுக்கு 3 லட்சம் டன் கனிமம் எடுக்க  இலக்கு... மத்திய அரசு  ரூ.1,500 கோடி திட்டம் !  

 
 

மின்னணு, தொழிற்சாலை மற்றும் பயன்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி கழிவுகளில் இருந்து முக்கிய கனிமங்களை மீட்டெடுக்கும் நோக்கில் ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டம் மத்திய அரசால் செப்டம்பர் 3-ம் தேதி ஒப்புதல் பெற்றது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் கழிவுகளை மறுசுழற்சி செய்து கனிமங்களை பிரித்தெடுக்கும் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடு குறித்து நேற்று மத்திய சுரங்கத்துறை செயலாளர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுரங்கத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஜவகர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு செயல்திட்டங்களை ஆராய்ந்தனர்.

கூட்டத்திலிருந்து முக்கிய முடிவாக, கழிவுகளில் இருந்து கனிமங்களை மீட்டெடுக்கும் திறனை ஆண்டுக்கு 3 லட்சம் டன் அளவுக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது. திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், நாட்டின் கனிம இறக்குமதி சார்பை குறைத்து, உள்நாட்டு உற்பத்திக்கு புதிய வலுசேர்க்கும் என நிபுணர்கள் கணிப்பிடுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!