திருவள்ளுவர் தினம்: இன்று டாஸ்மாக் கடைகள், இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 16) சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய இறைச்சிக் கூடங்கள் இன்று முழுமையாக மூடப்படுகின்றன.
இதன்படி பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கள்ளிக்குப்பம் ஆகிய 4 இடங்களில் இயங்கும் மாநகராட்சி இறைச்சிக் கூடங்கள் இன்று செயல்படாது. இது மட்டுமல்லாமல், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் இறைச்சிக் கடைகளும் இன்று விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினத்தின் புனிதத்தைப் போற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். அதே போன்று இன்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபான பார்களையும் இன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!