டாஸ்மாக் போராட்டம் தள்ளிவைப்பு... இன்று அமைச்சர் முத்துசாமியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த டாஸ்மாக் பணியாளர்கள், தற்போது அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகியுள்ளனர். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும், துறை அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே நாளை (டிசம்பர் 16, 2025) மீண்டும் ஒரு முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் தங்களது மேம்பட்ட பணிச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்திற்காகப் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். நீண்ட காலம் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்குதல். நிரந்தர அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல, காலமுறை ஊதியம் வழங்குதல். பணியாளர்களுக்கு ஓய்வூதிய வசதியை உறுதி செய்தல்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அது திருப்தியளிக்காத நிலையில், தற்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி இது குறித்துப் பேசுகையில், "அமைச்சர் முத்துசாமியுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் குறித்த இறுதி அறிவிப்பு வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே போராட்டம் வாபஸ் பெறப்படுமா அல்லது தொடருமா என்பது தெரிய வரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!