3 நாட்களுக்கு மது விற்பனைக்குத் தடை... தேர்தல் ஆணையம் மதுக்கடைகளுக்கு அதிரடி சீல்!  

 

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மது விற்பனைக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி வாக்குப் பதிவுக்கு முன்னதாக மது விநியோகத்தைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நேற்று இரவு 10 மணி அளவில் புதுச்சேரி முழுவதும் உள்ள சுமார் 453 மதுபானக் கடைகளுக்கும் கலால் துறை அதிகாரிகள் நேரில் சென்று முறைப்படி சீல் வைத்தனர்.

மதுக்கடைகள் மூடப்படுவதற்கு முன்னதாக நேற்று மாலை முதலே புதுச்சேரி உள்ளூர் மக்களும், வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் மதுபானக் கடைகளில் அலைமோதினர். மதுபானக் கிடங்குகளுக்கு நேற்று மாலை 5 மணிக்கே சீல் வைக்கப்பட்ட நிலையில், சில்லறை விற்பனைக் கடைகளிலும் இருப்பு வைப்பதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். தடையை மீறி யாராவது மது விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கலால் துறை எச்சரித்துள்ளது.

தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பேசிய தாசில்தார் ராஜேஷ் கண்ணா, புதுச்சேரியின் 19 எல்லைப் பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மதுபானக் கடைகள், கிடங்குகள் மற்றும் எல்லைப் பகுதிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாகக் கண்காணிக்கப்படும். மதுக்கடத்தலைத் தடுக்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!