3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்... தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஏதுவாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 21ம் தேதி காலை 10 மணி முதல் 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
இந்த உத்தரவை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது அல்லது பதுக்கி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மது விற்பனைத் தடையின் மூலம் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!