வருமான வரி ரிஃபண்ட் ஏன் தடை? வரி செலுத்துபவர்கள் குழப்பம்!
2025-ம் ஆண்டுக்கான வருமான வரி ரிஃபண்ட் தொடர்பாக பலருக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. “முரண்பாடுகள்” காரணமாக ரிஃபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டதாக வருமான வரித் துறையிடமிருந்து எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல்கள் வந்ததாக வரி செலுத்துவோர் தெரிவிக்கின்றனர். சமூக ஊடகங்களில் இதுகுறித்த ஸ்கிரீன் ஷாட்கள் வேகமாக பரவி வருகிறது.
பட்டய கணக்காளர் பிரதிக் பர்தா கூறுகையில், அதிக ரிஃபண்ட் தொகை, 80C, 80D, HRA போன்ற கோரிக்கைகள் படிவம் 16-ல் உள்ள விவரங்களுடன் பொருந்தாதபோது இதுபோன்ற எச்சரிக்கைகள் வர வாய்ப்பு உள்ளது என்றார். இதுவரை வருமான வரித் துறை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடாததால், வரி செலுத்துவோரின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!