கிரீன்லாந்து விவகாரம்... ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி ... ட்ரம்ப் மிரட்டல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு கடும் வரி விதித்து வரும் அவர், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவை இலக்காக கொண்டு நடவடிக்கை எடுத்தார். இதைத் தொடர்ந்து ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.
இதற்கிடையில், கிரீன்லாந்து மீது டிரம்ப் கவனம் திரும்பியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா, சீனா நாடுகளின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். அந்த சுயாட்சி பிராந்தியத்தை விற்குமாறு டென்மார்க்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் டென்மார்க் மற்றும் நேட்டோ நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கிரீன்லாந்து ஒப்பந்தம் நடைபெறும் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி 1 முதல் இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளின் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றார். இதனால் அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகளுக்கிடையே புதிய வர்த்தக பதற்றம் உருவாகி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!