எரிவாயு தட்டுப்பாடு...  உணவகங்களுக்கு மின் கட்டண மானியம் அறிவிப்பு!

 

 

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கிளவுட் சமையல் மையங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், அவற்றுக்கு நிவாரணமாக மின் கட்டண மானியம் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு, மின் வாரியத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மின் அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின் நுகர்விற்கு ஒரு யூனிட்டிற்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மின் சமையல் சாதனங்களை வாங்க விரும்பும் சிறு மற்றும் குறு தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்கப்படும். மின்சார சமையல் உபகரணங்கள் வாங்க ரூ.3.05 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதுடன் அதில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மின் பயன்பாடு அதிகரித்தாலும் அது வழக்கமான கணக்கீட்டின் அடிப்படையில் மதிப்பிடப்படாது என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.

மேலும் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்களது காய்கறி மற்றும் பழங்களை எந்த கட்டுப்பாடும் இன்றி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து உபரிப் பாலைப் பெறவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!