நல்லாசிரியர் விருது பெற்றவர், அரிவாளால் தாக்கி கொலை!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் இளங்கோவன் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்ல ஆசிரியர் விருதை பெற்றவர் என்பதால் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
பலத்த காயங்களுடன் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!