நண்பருடன் நைட் ஷோ போன இளம்பெண் மரணம்... கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி பெண் பாரதி, தனது ஆண் நண்பருடன் இரவு சினிமா பார்த்த பின்னர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, ஆண் நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (பி.இ. பட்டதாரி). இவர் சங்கர்நகர் பகுதியில் டியூஷன் எடுக்கும் இடத்திலேயே தங்கி வந்துள்ளார். இவருடைய நண்பர் உதயசரண், தனியார் மருத்துவமனையில் உயரதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் கடந்த உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 7ம் தேதி இருவரும் இரவு நேர சினிமாவுக்குச் சென்றுள்ளனர். பின்னர், பாரதி தங்கியிருந்த அறையில் உதயசரண் வந்து தங்கியுள்ளார். பாரதி மது மற்றும் சிகரெட் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர் என்றும், இதை உதயசரண் கண்டித்ததாகவும் தெரிகிறது. மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாரதி டார்ச்சர் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தன்று, பாரதி சிகரெட் பிடித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் மயக்கம் அடைந்த நிலையில், உதயசரண் அவரைத் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், பாரதி ஒரு மணி நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு, பாரதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதில், பாரதியின் மூக்கில் இரத்தக் காயமும், நெஞ்சுப் பகுதியில் வீக்கமும் இருந்தது தெரிய வந்தது.
உதயசரணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் தாக்கியதாகவும் முதலில் கூறியுள்ளார். ஆனால், தீவிர விசாரணையில், தன்னைத் திருமணம் செய்ய டார்ச்சர் செய்ததால் ஆத்திரம் அடைந்து, பாரதியை அடித்து, பின்னர் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சந்தேக மரணமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, உதயசரண் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!