சுவர் இடிந்து இளம்பெண் உயிரிழப்பு... தூங்கிக் கொண்டிருந்த போது சோகம்!
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாகக் கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரு தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாகக் கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி கிராமத்தில், ஒரு வீட்டின் பக்கச் சுவர் நனைந்து பலவீனமடைந்தது.
நேற்றிரவு, அந்த வீட்டின் உரிமையாளரான முத்துவேல், அவரது மனைவி கீதா, மற்றும் மகள்கள் ரேணுகா, கனிமொழி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பக்கச் சுவர் இடிந்து, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாகக் காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, கும்பகோணம் அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் பலத்த காயமடைந்த கீதா மற்றும் அவரது மகள் ரேணுகா (50) ஆகியோர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ரேணுகா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!