தலையில் கல்லைப்போட்டு இளம்பெண் படுகொலை... நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு!
ஈரோடு ரிங் ரோடு அருகே புதர்மண்டிய பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். கொலையாளிகள் அந்தப் பெண்ணின் தலையில் பெரிய கல்லைப் போட்டு மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இதனால் முகம் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் உடல் இருந்துள்ளது. சடலம் ஆடைகள் இன்றி கண்டெடுக்கப்பட்டுள்ளதால், கொலையாவதற்கு முன்பு அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணிற்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அருகில் கிடந்த தடயங்களை வைத்து அவர் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலை நடந்த ரிங் ரோடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று இரவு அந்தப் பகுதிக்கு வந்த வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரிங் ரோடு பகுதியில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததையும், சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பதையும் சுட்டிக்காட்டி அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். போலீஸ் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!