undefined

இளம்பெண் தலையில் கல்லை போட்டு கொலை... திருப்பூரில் பரபரப்பு!

 
திருப்பூர் மாவட்டத்தில், நர்ஸ் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த தனியார் மருத்துவமனை நர்ஸ் ஒருவர், தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தலை மற்றும் கை நசுங்கிய நிலையில் இருந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலேயே நடந்துள்ள இந்த கொலை சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது