undefined

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண் பலாத்காரம்... ஒருதலையாய் காதலித்த வாலிபர் வெறிச்செயல்!

 

கர்நாடக மாநிலம் உடுப்பி தாலுகா பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைத் தொடர்ந்து ஒருதலையாகக் காதலித்து, திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்ததால் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த உடுப்பி தாலுகா, இரியடுக்கா போலீஸ் எல்லைக்குட்பட்ட நாயர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் பூஜாரி (26).என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரதீப் பூஜாரி அதேப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் பிரதீப்பின் காதலை ஏற்கவில்லை. இளம்பெண் மறுத்தாலும், பிரதீப் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்று, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் இரியடுக்கா போலீசில் புகார் அளித்தபோது, பிரதீப் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த பிறகும் பிரதீப் இளம்பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் நடந்து சென்ற இளம்பெண்ணை வழிமறித்த பிரதீப், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். இதற்கு இளம்பெண் மறுத்ததால், அவர் அப்பெண்ணை மறைவான பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது.

இது குறித்து இளம்பெண் உடுப்பி மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிரதீப்பைக் கைது செய்தனர். பின்னர், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!