கணவர் கண் எதிரிலேயே இளம்பெண் கூட்டுப் பலாத்காரம்... தூத்துக்குடியில் கொடூரம்... 2 சிறார்கள் உட்பட 3 பேர் வெறித்தனம்!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, வேலையை விட்டு விலக முடிவு செய்தனர். இந்நிலையில் அந்த இளம்பெண் தனது கணவர் கண் எதிரிலேயே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அசாம் தம்பதியை திருநெல்வேலியில் வசிக்கும் முகமது மஹ்புல் ஹுசைன் (27) என்பவர் கமிஷன் பெற்றுக் கொண்டு இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டுள்ளார். அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் குறைவாக இருந்ததாலும் தம்பதி வேலையில் இருந்து விலகி கேரளாவுக்குச் செல்ல முடிவெடுத்தனர். இதற்காக அவர்கள் ஆட்டோவில் திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்த போது, முகமது மஹ்புல் ஹுசைன் அவர்களைத் தொடர்பு கொண்டு, இங்கேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி, முகமது மஹ்புல் ஹுசைன் இரண்டு இளம் சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் நின்றுள்ளார். ஆட்டோ அங்குச் சென்றதும், தம்பதி கல்குவாரியில் இருந்து பணத்தைத் திருடி விட்டதாக ஆட்டோ ஓட்டுநரிடம் பொய்ச் சொல்லி, இருவரையும் அங்கிருந்து காட்டுப் பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அந்தப் பெண்ணின் கணவரைத் தாக்கிய முகமது மஹ்புல் ஹுசைன் உட்பட மூவரும், அவரது கண் எதிரிலேயே அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பல மணி நேரத்திற்குப் பிறகு, இருவரையும் சாலையோரத்தில் விட்டுவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உடனடியாகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, தப்பியோடிய முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு இளம் சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கணவர் கண் எதிரிலேயே அரங்கேறிய இந்தக் கொடூரச் சம்பவம், நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!