நடுரோட்டில் காதலனுக்காக முடியைப் பிடித்திழுத்து அடித்துக் கொண்ட இளம்பெண்கள்... வைரலாகும் வீடியோ !
ஒரே வாலிபரை இருபெண்கள் காதலித்து வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடுரோட்டில் இளம்பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்திழுத்து அடித்துக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
கான்பூரில் யசோதா நகர் புறவழிச்சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தில், வெள்ளை உடை அணிந்த பெண் மற்றொரு பெண்ணின் முடியை பிடித்து இழுத்து, குத்துகள் மற்றும் உதைகள் அடித்து தாக்கிக் கொண்டனார்.
இதையடுத்து கான்பூர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் தாக்குதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் இவ்வளவு வன்முறையான நடத்தைப் பற்றி பரபரப்பு கருத்துக்கள் எழுந்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!