undefined

50 அடி உயரத்திலிருந்து விழுந்து இளைஞர் பலி.. மெட்ரோ பணியின் போது துயரம்!

 

சென்னை மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி, 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம், மெட்ரோ பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோரே கஞ்சு (23). இவர் கடந்த 11 மாதங்களாகச் சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் தளம்.  நேற்று ஆற்காடு சாலையில் உள்ள 185-வது எண் கொண்ட மெட்ரோ ரயில் தூணில் ஏறி சோரே கஞ்சு வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகப் பிடி நழுவி, சுமார் 50 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த சோரே கஞ்சுவை, சக ஊழியர்கள் மீட்டு உடனடியாகப் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த விபத்து குறித்து வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணியின்போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா அல்லது தற்காலிகப் பிழை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வரும் நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பு விதிகளில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது எனப் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!