பாடகர் SPB-க்கு தெலங்கானா அரசு மரியாதை.. ரவீந்திர பாரதியில் டிச.15ல் சிலை திறப்பு!
மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் சிலையை, தெலங்கானா மாநில அரசு அதன் கலாச்சார மையமான ரவீந்திர பாரதியில் வரும் டிசம்பர் 15ம் தேதி திறந்து வைக்கிறது. இந்தச் சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அழைப்பாளர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மைத்துனரும், மூத்த நடிகருமான 'சுபலேக' சுதாகர் அவர்கள், சனிக்கிழமை அன்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து, சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுத்தார். அப்போது, பாடகரின் சிலையை ரவீந்திர பாரதியில் நிறுவ அரசு எடுத்த முடிவுக்காக அவர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
சிலை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தும் விதமாக, கடந்த நவம்பர் 27ஆம் தேதி, சுற்றுலாத் துறை அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ், நடிகர் சுதாகருடன் இணைந்து ரவீந்திர பாரதிக்குச் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு குறித்து அமைச்சர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், சிலை திறப்பு ஏற்பாடுகள் தொடர்பாகப் பல பரிந்துரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல், பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!