கருக்கலைப்புக்கு ஒத்துக்கல...  மகள்கள், மனைவியை  ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்த கணவன் பரபரப்பு வாக்குமூலம்! 

 

தெலுங்கானா மாநிலம் பொன்னேலு கிராமத்தில் சொந்தமாக நீச்சல் குளம் நடத்தி வரும் அசாருதீன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை நீச்சல் குளத்தில் மூழ்கடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட இவர்கள், தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக அசாருதீன் நாடகமாடிய நிலையில், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மை அம்பலமானது.

அசாருதீனின் மனைவி பர்ஹத் தற்போது ஐந்தாவது முறையாகக் கருத்தரித்திருந்தார். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் கருக்கலைப்பு செய்யுமாறு அசாருதீன் வற்புறுத்தியுள்ளார். இதற்கு முன்பும் இரண்டு முறை பர்ஹத் கருத்தரித்தபோது, அசாருதீனின் வற்புறுத்தலால் கருக்கலைப்பு செய்துள்ளார். ஆனால், இந்த முறை பர்ஹத் அதற்குச் சம்மதிக்காததால் தம்பதியிடையே கடந்த ஒரு மாதமாகத் தகராறு நீடித்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அசாருதீன், தனது மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டுப் புதன்கிழமை அன்று குடும்பத்தினரைத் தனது நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலில் மனைவியை நீரில் மூழ்கடித்துக் கொன்றவர், பின்னர் தாயில்லாமல் குழந்தைகளைப் பராமரிக்க முடியாது எனக் கூறி தனது இரண்டு பிஞ்சு மகள்களையும் அதே குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். மாமனார் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், தனது குற்றத்தை அசாருதீன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!