“கள்ளக்காதலனுடன் போவேன்” என அடம்பிடித்த மனைவி - ஓடும் காரிலேயே கழுத்தை அறுத்த கணவர்.. போலீசார் முன்னிலையில் கொடூரம்!
குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவியைப் போலீஸ் முன்னிலையிலேயே காரில் வைத்துக் கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் சதாசிவபேட்டை அருகே அரங்கேறியுள்ளது.தெலுங்கானா மாநிலம் தும்மன்பள்ளியைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சித்தாரெட்டி (35). இவருடைய மனைவி கவிதா (29). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருப்பதியைச் சேர்ந்த பவன்குமார் ரெட்டி என்பவருடன் கவிதாவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதை அடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி கவிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளைத் தவிக்க விட்டுவிட்டுத் தனது காதலனுடன் ஜட்செர்லா பகுதிக்குச் சென்றுவிட்டார்.
மனைவியைக் காணவில்லை எனச் சித்தாரெட்டி அளித்த புகாரின் பேரில், ஜட்செர்லாவில் இருந்த கவிதாவை போலீசார் கண்டுபிடித்தனர். சித்தாரெட்டி, காவலர் காதிர் என்பவருடன் காரில் சென்று கவிதாவைச் சந்தித்துத் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது, "காதலனை விட்டு வர முடியாது" எனக் கூறி கவிதா தனது கணவரை ஆவேசமாகத் திட்டியுள்ளார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கவிதா தனது கணவருடன் வரச் சம்மதித்தார். காரில் காவலர் முன் இருக்கையில் அமர, பின் இருக்கையில் சித்தாரெட்டி, கவிதா மற்றும் அவரது காதலன் பவன்குமார் அமர்ந்து பயணம் செய்தனர்.
சதாசிவபேட்டை அருகே காரை நிறுத்தி டீ குடித்தபோது, ஆத்திரத்தில் இருந்த சித்தாரெட்டி அங்குள்ள ஒரு கடையில் மறைமுகமாகக் கத்தி ஒன்றை வாங்கியுள்ளார். மீண்டும் பயணம் தொடர்ந்த சில நிமிடங்களில், சித்தாரெட்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் கவிதாவின் கழுத்தில் சரமாரியாகக் குத்தினார். ரத்தம் பீறிட்டுத் தெறிக்க, காவலர் தடுத்தும் பலனின்றி கவிதா காரிலேயே துடிதுடித்துச் சரிந்தார்.
படுகாயமடைந்த கவிதாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சித்தாரெட்டியைத் தற்கொலை முயற்சி மற்றும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தனர். காவல்துறையினரின் முன்னிலையிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!