ஓமன் கடலில் ஈரான் தாக்குதல், 15 இந்தியர்கள் மீட்பு!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இராக்கிலும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
ஓமன் அருகே ஹோர்முஸ் நீரிணை பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் விமானப்படை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இதில் இருந்த 20 ஊழியர்களில் 15 இந்தியர்கள் உட்பட அனைவரும் மீட்கப்பட்டனர். 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கப்பலில் இருந்தோரில் 5 பேர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏவுகணை தாக்குதல் மூலம் ஓமனின் துக்கும் துறைமுகமும் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட 20 பேரும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடல் பாதுகாப்பு கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!