undefined

பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு! பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

 

பாகிஸ்தானில் தொடர்ந்து தீவிரவாத பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இலங்கையில் பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்திருப்பதைப் போலவே பாகிஸ்தானும் பொருளாதார பிரச்சனைகளில் தவித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.35க்கு உயர்த்தப்பட்டது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையை நினைத்தே பார்க்க முடியாத அளவு பாகிஸ்தான் அரசு உயர்த்தியிருந்தது. இந்நிலையில், இன்று பாகிஸ்தான் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப் படையினர் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் குண்டுவெடித்து 25 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் 120 க்கும் மேற்பட்டேர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை  மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலரும் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் மீட்பு பணி தாமதமாகி கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது திட்டமிட்ட தாக்க்டுஹல் என்றும், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!