undefined

 பயங்கரம்... காதலிக்கு வீடியோ கால் பேசிக்கொண்டே  விஷம் குடித்து கையை அறுத்து உயிரை விட்ட காதலன்!

 
உத்திரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயது அல்தாப். இவர் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் காதல்.  இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென கடந்த மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து காதலி  அல்தாப்பிடம் பேசுவதை காதலி தவிர்த்தார். 

இந்நிலையில் பிப்ரவரி 23ம் தேதி  தன்னுடைய வீட்டில் இருந்தபடி காதலிக்கு அல்தாப் வீடியோ கால் செய்தார். அவர் வீடியோ காலில் பேசியவாறு விஷம் குடித்ததோடு தன்னுடைய கையையும் அறுத்துக் கொண்டார்.இதனை வீடியோவாக பதிவு செய்து அவர் தன் காதலிக்கு அனுப்பினார். இதில் அல்தாப் உயிரிழந்ததாக அக்கம்பக்கத்தின் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதன்படி  போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில்  வைரல் ஆகி வருகிறது. இது குறித்த அல்தாப்பின்  சகோதரி ரேஷ்மா   அந்த இளம் பெண் தன் சகோதரனிடம் 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த இளம் பெண் மீது ரேஷ்மா காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?