undefined

பெங்களூருவில் பயங்கரம்... பேருந்து மீது கார் மோதி கோர விபத்து - 5 பேர் துடிதுடித்து உயிரிழப்பு!

 

பெங்களூரு - துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜிந்தால் மேம்பாலத்திற்கு அருகே அரசுப் பேருந்து மீது தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்திற்குள்ளானது. நேற்று நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 5 பேர் துடிதுடித்து பலியானார்கள். 

சம்பவம்: துமகுருவில் இருந்து பெங்களூரு நோக்கி அதிவேகமாக வந்த 'டாட்டா இண்டிகா' கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. தடுப்பைத் தாண்டி எதிர்த் திசையில் பாய்ந்த கார், பெங்களூருவில் இருந்து ஹூப்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு நேர் மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மற்றொரு இளைஞரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் 17 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இதில் ஹர்ஷித் (20), லலித் குமார் (22), துர்காபிரசாத், கேசவ் மற்றும் தனுஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தொட்டபல்லாபுராவைச் சேர்ந்த நண்பர்கள்.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 45 முதல் 55 பயணிகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்து ஓட்டுநர் கெம்பராஜ் மற்றும் பயணிகள் அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. கார் மணிக்கு 100 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் வந்ததே விபத்துக்கு முதன்மைக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான இளைஞர்கள் மது அருந்தியிருந்தனரா என்பதை உறுதி செய்ய இரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பெங்களூரு அருகே நடந்த மற்றொரு விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். அந்தச் சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது வேதனையளிக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!