பெங்களூருவில் பயங்கரம்... குப்பையில் சாக்குப்பையில் கை, கால்களை கட்டி இளம்பெண் சடலம்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குப்பை வண்டியில் இருந்து ஒரு பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக அதாவது மாநகராட்சி குப்பை வண்டியை ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக நிறுத்துவர். அதன்படி வழக்கம்போல் சம்பவநாள் இரவு டிரைவர் அங்கு வண்டியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் குப்பை போடுவதற்காக வந்தபோது சாக்கு பையில் இருந்து ஒரு பெண்ணின் தலை தெரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது ஒரு பெண்ணை கொலை செய்து அவரது கை கால்களை கட்டி சாக்கு பையில் திணித்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்தப் பெண் யார் எனத் தெரியாத நிலையில் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டை வைத்து அவர் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் அந்த பெண் புஷ்பா என்கிற ஆஷா என தெரியவந்தது. இவருக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கலாம்.
இவர் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்தார். யாரோ மர்ம நபர்கள் சிலர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து உடலை குப்பை வண்டியில் வீசியது தெரிய வந்தது.இது குறித்த விசாரணைக்காக புஷ்பாவின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!