பெங்களூருவில் பயங்கரம்.. இளம்பெண்ணை 2.5 கி.மீ தூரம் துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு.. பகீர் வீடியோ!
பெங்களூருவின் பரபரப்பான சாலை ஒன்றில் இளம்பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில்க் போர்டு சாலை பகுதியில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் தனியாகச் சென்ற இளம்பெண்ணை மூன்று இளைஞர்கள் வழிமறித்துத் தொந்தரவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இரவு சுமார் 10 மணியளவில் நடந்துள்ளது. இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்த 3 இளைஞர்கள் அவரைத் துரத்தத் தொடங்கினர்.
வீடியோவில் உள்ள இளைஞர்கள் எவ்வித அச்சமும் இன்றி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளனர்: ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். மூன்று பேருமே தலைக்கவசம் (Helmet) அணியவில்லை. காரின் உரிமையாளர் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பெங்களூரு மாநகரக் காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
போலீசாரின் விசாரணையில் இளைஞர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, அந்த வாகனம் யாருடையது என்ற விவரத்தை கண்டறிந்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த மூன்று இளைஞர்களையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. "பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்" என்று கருதப்படும் பெங்களூருவில், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!