கோவையில் பயங்கரம்... வேறொரு பெண்ணுடன் கணவன் உல்லாசம்... ஆத்திரத்தில் மர்ம உறுப்பை அறுத்த மனைவி!
கோவையில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த கணவரைக் கத்தியால் தாக்கி, அவரது மர்ம உறுப்பை அறுத்த அசாம் மாநிலப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் (33) என்பவர், கடந்த சில ஆண்டுகளாகக் கோவையில் தங்கி பிளம்பர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜிண்டி (36) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிதானுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிந்ததையடுத்து, அசாமிலிருந்து கோவைக்கு வந்த ஜிண்டி, கடந்த 6 மாதங்களாகக் கணவருடன் வசித்து வந்தார். ஜிண்டி கண்டித்த பிறகும் பிதான் தனது நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும், அவர் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று ஜிண்டி வெளியில் சென்றிருந்த நேரத்தில், பிதான் வேறொரு பெண்ணைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக வீட்டிற்குத் திரும்பிய ஜிண்டி, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்றிரவு மீண்டும் குடிபோதையில் வந்த பிதான், மனைவியிடம் தகராறு செய்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். ஆனால் கணவர் செய்த துரோகத்தால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ஜிண்டி, அதிகாலையில் கத்தியால் பிதானின் மர்ம உறுப்பை அறுத்துள்ளார்.
பிதான் வலியால் அலறியதைக் கேட்ட ஜிண்டி, வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். பிதானின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கதவைத் திறந்து ரத்த வெள்ளத்தில் துடித்த பிதானை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் அறிந்து விரைந்து சென்றபோலீசார், தலைமறைவாக இருந்த ஜிண்டியைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!