undefined

ஜப்பானில் பயங்கரம்.. 67 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து - 2 பேர் பலி;26 பேர் படுகாயம்!

 

ஜப்பான் நாட்டின் கன்மா மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக 67 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானின் கன்மா மாகாணத்தில் உள்ள கன்-எட்சு (Kan-Etsu) நெடுஞ்சாலையில் மினஹமி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஜப்பானில் தற்போது நிலவி வரும் கடும் குளிர்காலம் காரணமாக, அந்தப் பகுதியில் சாலை முழுவதும் பனி படர்ந்து காணப்பட்டது. நேற்றிரவு, நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு லாரிகள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் மீது ஒன்று மோதின. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து தடைபட்டது.

இரவு நேரம் மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாகப் பார்வைத்திறன் (Visibility) மிகக் குறைவாக இருந்தது. இதன் காரணமாகப் பின்னால் வந்த கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் முன்னால் விபத்து நடந்திருப்பதை உணர முடியாமல், ஒன்றன் பின் ஒன்றாக மோதின. மொத்தம் 67 வாகனங்கள் இந்தச் சங்கிலித் தொடர் விபத்தில் சிக்கி உருக்குலைந்தன. இதில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து பெரும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் சிக்குண்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 26 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து வந்த ஜப்பானியப் போலீசார் மற்றும் மீட்புப் படையினர், கிரேன் உதவியுடன் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் பல மணி நேரம் இந்த மீட்புப் பணிகள் தொடர்ந்தன. விபத்து நடந்த நெடுஞ்சாலைப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், வரும் நாட்களில் பனிப்பொழிவு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் அதீத எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!