காபூலில் பயங்கரம்... உணவகத்தில் குண்டு வெடித்து 7 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டினரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காபூலின் ஷார்-இ-நவ் (Shar-e-Naw) பகுதியில், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற சீன முஸ்லிம் தனது மனைவியுடன் இணைந்து இந்த உணவகத்தை நடத்தி வந்துள்ளார். இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் பங்குதாரராக இருந்துள்ளார். இந்த ஓட்டலில் சீனர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காகப் பிரத்யேக உணவுகள் தயாரிக்கப்படுவதால், அங்கு எப்போதும் வெளிநாட்டுப் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
நேற்று பிற்பகல் 3 மணி அளவில், ஓட்டலின் சமையலறைக்கு அருகே திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்தச் சமயத்தில் உணவகத்தில் ஏராளமானோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் உணவக உரிமையாளர் அப்துல் மஜீத் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் ஒருவர் சீன நாட்டவர், மற்ற 6 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
குண்டுவெடிப்பில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!