undefined

திருப்பூரில் பயங்கரம்... எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து வந்த பயங்கரவாதிகள் - 6 பேர் கைது!

 

கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீசாரின் சிறப்புப் படை மற்றும் உளவுத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த 8 பேர் சிக்கியுள்ளனர்.

மிசானூர் ரஹ்மான், முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஷாஹித் மற்றும் முகமது உஜ்ஜால் ஆகிய 6 பேர் திருப்பூரின் ஊத்துக்குளி, திருமுருகன்பூண்டி மற்றும் பல்லடம் பகுதிகளில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளனர். மீதமுள்ள 2 பேர் மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா (LeT), பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) மற்றும் வங்கதேசத்தின் சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான 6 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் போலி ஆதார் கார்டு மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தித் திருப்பூரில் தங்கி வேலை செய்ததும் தெரியவந்துள்ளது. டெல்லியில் சர்ச்சைக்குரிய மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமான போஸ்டர்களை ஒட்டிய நபருடன் இவர்களுக்குத் தொடர்பு இருந்ததை அடுத்து, போலீசார் இவர்களைக் கண்காணித்து வந்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 8 மொபைல் போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அவர்கள் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளுடன் உரையாடியுள்ளனரா என்பது குறித்து தடயவியல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் போன்ற தொழிலாளர்கள் அதிகம் கூடும் இடங்களில், முறையான ஆவணச் சரிபார்ப்பு இன்றி வெளிமாநிலத்தவர் அல்லது வெளிநாட்டவர் பணியமர்த்தப்படுவது இது போன்ற சமூக விரோத சக்திகள் பதுங்குவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. இந்தச் சம்பவம் காரணமாகத் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!