undefined

 காரியாபட்டி அருகே பயங்கரம்... கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்!

 
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விவசாயி ஒருவரைக் கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி, சடலத்தை கிணற்றில் வீசியிருந்த நிலையில், அவரது சடலத்தை போலீசார் மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். முருகன் தனது கிராமத்தில் ஆடு மேய்ப்பதோடு, விவசாயமும் செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற முருகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஊருக்கு அருகே உள்ள ஒரு தோட்டக் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலம் மிதப்பதை பார்த்து, அப்பகுதியினர் போலீஸாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காரியாபட்டி தீயணைப்புத் துறை வீரர்கள் கிணற்றிலிருந்து சாக்கு மூட்டையை வெளியே எடுத்தனர். அதில் முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலில் கழுத்து, தலை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் காணப்பட்டது.

ஆவியூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில் முருகன் மற்றும் சிலர் கிணற்றின் அருகில் உள்ள கட்டிடத்தில் அமர்ந்து மது அருந்தியதும், அதன் பிறகு முருகன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் சடலம் வீசப்பட்டதும் தெரியவந்தது.

சம்பவம் இடத்தில் எஸ்பி கண்ணன் விசாரணை நடத்தினார். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆவியூர் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?